Saturday, January 22, 2011

Ex-CM from Vanniyar Community N.Rangasamy quits Congress



புதுச்சேரியில் ரங்கசாமி உள்பட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா

First Published: 21 Jan 2011 01:09:04 AM IST

புதுச்சேரி, ஜன. 20: புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் என். ரங்கசாமி உள்பட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தனர்.

காங்கிரஸ் தலைமையின் கட்டளையின்படி 2008-ல் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த ரங்கசாமி, சில காலம் மெüனம் காத்து வந்தார். விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது புதிய கட்சி தொடங்கும் நோக்கத்தில் தன்னுடைய எம்எல்ஏ பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

அத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி உள்பட காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார் ரங்கசாமி.

அதேபோல அரசு கொறடா பதவியை வகித்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அங்காளன் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இவர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளர்.

சட்டப் பேரவை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த ரங்கசாமி சட்டப் பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் இல்லாத நிலையில் சட்டப் பேரவை செயலர் சிவப்பிரகாசத்திடம் தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தார்

அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர் ஆகியோர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் மக்கள் தலைவர் வ. சுப்பையாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட பிரெஞ்சு நாட்டுக்குச் சென்றுள்ள நிலையில், இக்கட்சியின் தலைவர்கள் அ. ராமமூர்த்தி, வி.எஸ். அபிஷேகம் உள்ளிட்டோர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

அரசுக்கு ஆபத்தில்லை: ரங்கசாமி உள்பட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்திருந்தாலும் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து இல்லை. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மொத்தம் 13 பேர். இதில் ரங்கசாமி உள்ளிட்ட 2 பேர் ராஜிநாமா செய்துள்ளனர்.

இதனால் அக் கட்சியின் எம்எல்ஏக்கள் பலம் 11 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் 7 பேர் இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதனால் அரசுக்கு 18 எம்எல்ஏக்களின் பலம் இருக்கிறது.

பெரும்பான்மை பலத்துக்கு 16 எம்எல்ஏக்கள் போதும் என்ற நிலையில் இப்போதைக்கு வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆபத்தில்லை.

புதிய கட்சி: காங்கிரஸ் பெயரைக் கொண்டு புதியக் கட்சியை ரங்கசாமி விரைவில் தொடங்குகிறார். அவ்வாறு உதயமாகும் கட்சியின் கொடியும் காங்கிரஸ் கொடியின் சாயலில் இருக்கும் என்று தெரிகிறது.

புதிய கட்சியின் முறையான அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதற்குள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட விஷயங்கள் முடிக்கப்படும் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிமுக அணி முதல்வர் வேட்பாளரா? வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் ரங்கசாமியின் புதிய கட்சி இணைந்து தேர்தலைச் சந்திக்கும் என்றும், அப்போது இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ரங்கசாமிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

வேட்பாளர்கள் தயார்: இதற்கிடையில் ரங்கசாமியின் புதிய கட்சியில் இணைந்து தேர்தலைச் சந்திக்க ஏற்கெனவே பல்வேறு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராகவே இருக்கின்றனர். ரங்கசாமி பெயரில் செயல்படும் பேரவை சார்பில் இவர்கள் ஏற்கெனவே நல திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாமகவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அருள்முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்கெனவே ரங்கசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். இதைத் தவிர காங்கிரஸ்- திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்யும்போது சீட்டு கிடைக்காத ஒரு சில எம்எல்ஏக்களும் ரங்கசாமியின் பக்கம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Courtesy_

Also read the related stories

Rangasamy quits Congress, resigns as MLA

RAJESH B. NAIR

PUDUCHERY, January 21, 2011

 Former Chief Minister N. Rangasamy submitting his resignation letter to Legislative Assembly Secretary M. Sivaprakasam in Puducherry on Thursday. Photo: Special Arrangement

After maintaining distance from the Congress ever since he was removed from the Chief Minster's post in 2008, N. Rangasamy on Thursday tendered his resignation from the primary membership of the party and as Member of the Legislative Assembly.

Government whip in the Legislative Assembly P. Angalane also submitted his resignation from the party and as MLA in support of Mr. Rangasamy.

Even as senior Congress leaders were trying to persuade him to stay on in the party, Mr. Rangasamy with his supporters, including Chairman of the Oulgaret Municipality N. S. J Jayabal, came to the Assembly at around 11. 30 a.m and submitted the resignation to Legislative Assembly Secretary M. Sivaprakasam.

Later, former AICC member V. Balan handed over a copy of the resignation letter, which Mr. Rangasamy and Mr. Angalane had sent to Congress president Sonia Gandhi, to Chief of Pradesh Congress Committee A. V Subramanian at the party office. Mr Balan too tendered his resignation from the primary membership of the party.

Mr. Sivaprakasam told The Hindu that he had forwarded the resignation letters to Speaker R. Radhakrishnan. Officials in the Speaker's office said the Speaker was yet to go through the letters.

Talking to reporters after tendering the resignation, Mr. Rangasamy said he will reveal his plans at an appropriate time. When asked about the reason for his resignation, he said: “I was not happy with the way the government treated my constituency.”

Courtesy_

No comments:

Post a Comment